லாரியின் மீது கற்களை வீசி மர்ம நபர்கள் லாரியின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள விவேகானந்தர் நகரில் டேவிட் என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வரும் மனு என்பவருக்கு சொந்தமான லாரியை வாடகைக்கு எடுத்து மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் அமைந்துள்ள ஒரு தனியார் மில்லுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அந்த மில்லில் இருந்து பழைய பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரியானது மேட்டுப்பாளையம் நகரில் சென்று கொண்டிருந்த போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் லாரியை வழிமறித்ததோடு கற்களை வீசி தாக்கியுள்ளனர்.
இதனால் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து பிறகு அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் டேவிட் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரியின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக ரமேஷ், அரவிந்த், விக்னேஷ், கபீர் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.