சிங்கிளாக இருப்பதே பெஸ்ட் என்று கெத்தாக சொல்லும் அளவிற்கு இளைஞர்கள் உண்மையிலேயே அப்படி என்ன மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர்…?
காதல், திருமணம் என கமிடட் வாழ்க்கை வாழ்வதை விட சிங்கிளாக இருப்பதுதான் சுகம் என பல இளைஞர்கள் கெத்தாக சொல்லிக் கொள்கின்றனர். அதற்கு முரட்டு சிங்கிள் என பெயர் வைத்துக்கொண்டும் இளைஞர்கள் அப்படி என்ன மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர்..?
சிங்கிளாக இருப்பவர் உங்களை நீங்கள் கவனத்துக் கொள்வீர்கள். குறிப்பாக உடல் நலம், எதிர்கால வாழ்க்கை,கல்வி போன்றவற்றில் நீங்களே கவனம் செலுத்துவீர்கள். எந்த விஷயத்தையும் நீங்களாகவே சிந்தித்து முடிவெடுக்க முடியும். யாரையும் கேட்க வேண்டிய அவசியமும் இருக்காது.தேவையற்ற செலவு இருக்காது.
பொறாமை, பாதுகாப்பின்மை, பயம் போன்ற எதுவும் இருக்காது. கட்டுப்பாடுகள், விதிகள் கிடையாது.சுதந்திரப் பறவையாக சுற்றித் திரியலாம்.எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் போக முடியும்.இதேகமிடட் வாழ்க்கையில் இருந்தால் இருவரும் இணைந்து முடிவெடுக்க வேண்டும். அது இருவருக்கும் பிடித்த இடமாக இருக்க வேண்டும். ஆனால் தனியாக இருந்தால் விருப்பம் போல் யாரையும் கேட்காமல் டிக்கெட் வாங்கி நினைக்கும் நாளில்,ஹேப்பியாகநினைக்கும் நேரத்தில் பயணிக்கலாம்.
தனியாக இருந்தால் உங்களுடன் நீங்கள் கழிக்கும் நேரம் அதிகமாக இருக்கும். அப்போது உங்களை நீங்களே புரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உறவில் இருந்தால் டிராக் முற்றிலும் மாறிவிடும்.நண்பர்கள், உறவினர்களோடு அதிக நேரத்தை செலவிடலாம். மற்றவர்களைப் பற்றி புரிந்துகொள்ளவும் அன்பு செலுத்தவும் நேரம் கிடைக்கும்.உறவுகள் குறித்த புரிதல், பெண்களின் எதிர்பார்ப்பு என பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.
மொத்தத்தில் கமிடட் வாழ்க்கை என்பது தன் வாழ்க்கையை வேறொருவரிடம் ஒப்படைப்பது. சிங்கிள் வாழ்க்கை என்பது நம் வாழ்க்கையை நாமே தீர்மானிப்பது.