Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உதவி செய்வது போல் நடித்த இளைஞர்கள்… முதியவருக்கு ஏற்பட்ட கதி… தேடுதல் வேட்டையில் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உதவி செய்வது போல் நடித்து முதியவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அடுத்துள்ள பிரப்பன்வலசை களஞ்சியம் நகரில் முத்துகூறி(67) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் சென்ற இவர் மீண்டும் பிரப்பன்வலசை வருவதற்கு ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் காத்துகொண்டிருந்துள்ளர். அப்போது அடையாளம் தெரியாத 2 இளைஞர்கள் முத்துகூரியிடம் வந்து பேசியுள்ளார். இதனையடுத்து முதியவரை பிரப்பன்வலசையில் கொண்டிபோய் விடுவதாக கூறி உதவி செய்வதுபோல் நடித்துள்ளனர்.

இதனை நம்பி முதியவரும் அவர்களுடன் செல்ல முடிவெடுத்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பனைக்குளம் அருகே உள்ள நதிப்பாலம் பகுதியில் அந்த 2 இளைஞர்களும் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு முதியவரை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனைதொடர்ந்து முத்துகூரி அணிந்திருந்த 2 1/2 பவுன் மோதிரம், செல்போன் மற்றும் 500 ரூபாய் பணம் ஆகியவை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து முதியவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த 2 இளைஞர்களையும் தேடி வருகின்றனர்.

Categories

Tech |