பாப் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த இளம் பாப் பாடகியாக திகழ்ந்தவர், வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுள்ளி என்று அழைக்கப்படும் பாப் பாடகியான சோய் ஜின் ரீ, தென் கொரியாவிலுள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.பாடகி, நடிகை, தொலைக்காட்சித் தொடர், ரியாலிட்டி ஷோ என கலக்கிவந்தவர் சோய் ஜின் ரீ. மேடை நிகழ்ச்சிகளில் சுள்ளி என்ற பெயரில் தோன்றும் இவர், தனது பாடல்களின் மூலம் தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார்.25 வயதாகும் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பாடல் பாடுவதை நிறுத்தியுள்ளார். மன அழுத்தம், அச்ச உணர்வு ஆகியவையே அவர் பாடல் பாடுவதை நிறுத்தியதற்கு காரணமாகச் சொல்லப்பட்டது.
கே-பாப் குழுவில் ஒருவராகத் திகழும் இவர் ரசிகர்களால் பலமுறை கிண்டல்களுக்கு ஆளாகியுள்ளார். இதனை 2015இல் கலந்துகொண்ட ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் வெளிப்படையாக அவரே தெரிவித்தார்.எனக்கு நெருக்கமானவர்களும் என்னை விட்டுச் சென்றனர். என்னை யாரும் புரிந்துகொள்வதில்லை. நான் பலரால் காயப்பட்டுள்ளேன்’ என்று வருத்தமாகத் கூறினார்.இதைத்தொடர்ந்து தற்போது அவர் இறந்த நிலையில் கண்டெடுக்கபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.