Categories
தேசிய செய்திகள்

“ஆஸ்திரேலியாவில் இளம்பெண் கொடூர கொலை”…. இந்தியா தப்பிய குற்றவாளி 4 வருடங்களுக்கு பின் கைது…… போலீஸ் விசாரணை…..!!!!!

பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டவர் ராஜ்விந்தர் சிங். இவர் ஆஸ்திரேலியா நாட்டின் குடியுரிமை பெற்ற நிலையில் தன்னுடைய மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்துள்ளார். அதன்பிறகு திடீரென ராஜ்விந்திருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜவீந்தர் கோபத்தில் பழம் மற்றும் கத்தியுடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இவர் குயின்ஸ்லாந்தின் கரின்ஸ் நகர் லெங்கடி கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது கோர்டிங்ஸ்லி (24) என்ற இளம் பெண் தன்னுடைய செல்லப்பிராணி நாயுடன் அங்கு நடந்து சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் ராஜவிந்தரை பார்த்து நாய் குறைக்கவே ஆத்திரத்தில் ராஜ்விந்தர் இளம் பெண்ணுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது சண்டை முற்றியதால் ஆத்திரத்தில் ராஜ்விந்தர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணை கொடூரமான முறையில் குத்தி கொலை செய்து கடற்கரை மண்ணில் புதைத்துள்ளார். இந்த சம்பவம் நடந்து‌ 2 நாட்கள் கழித்து ராஜ்விந்தர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவுக்கு வந்துள்ளார்.

இவரை ஆஸ்திரேலியா போலீசார் இன்டர்போல் உதவியுடன் இந்திய காவல் துறையினர் மூலம் தேடி வந்த நிலையில் வருடங்களுக்குப் பிறகு ராஜ்விந்தரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இவரை ஆஸ்திரேலியா போலீசார் தங்கள் நாட்டுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். மேலும் ராஜ்விந்தரை கைது செய்து ஒப்படைத்தால் ஆஸ்திரேலியா போலீசார் ஒரு மில்லியன் ஆஸ்திரேலியா டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 5.51 கோடி ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |