திருமணமாகி 4 மாதமான இளம்பெண் உயிரிழந்தது பற்றி கோட்டாட்சியர் சரவணன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தால் கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் சந்தியா என்பவருக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பின் கடந்த இரண்டு மாதமாக சந்தியா மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். பின்னர் வீட்டில் இருந்த சந்தியாவிற்கு திடீரென வாந்தி ஏற்பட்டால் மயங்கிக் கீழே விழுந்துள்ளார்.
பிறகு அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி சந்தியாவின் தாய் கமலா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த இளம்பெண் சாவு தொடர்பாக கோட்டாட்சியர் சரவணன் மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.