Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சுப நிகழ்ச்சிகாக சென்ற இடத்தில்… பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் உறவினர் வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது கருப்பசாமி நகரில் அமைந்துள்ள கிணற்றில் குளிப்பதற்காக ஜோதி குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.

இதனை அடுத்து ஜோதி எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜோதியின் உடலை மீட்டெடுத்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |