Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

என்ன காரணம்னு தெரியல….. இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவிடைகழி கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 5 – ஆம் தேதியன்று ரம்யா விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |