மிக குறைந்த வயதில் பிரதம மந்திரியாக பின்லாந்து நாட்டை சேர்ந்த சன்னா மரின் தேர்வு செய்யப்பட்டார் .
பின்லாந்து சோசியல் டெமாகிராக்டிக் தலைமையிலான ஐந்து கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.முன்னாள் பிரதமரான ஆண்டி ரின்னி தபால் துறையில் உள்ள பணிகளை செய்யாததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதையடுத்து அங்கு நடைபெற்ற தேர்தலில் போக்குவரத்து துறை அமைச்சரான சன்னா மரியா போட்டியிட்டார்.
தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இத்தேர்தலில் வெற்றிபெற்ற சன்னா மரின் பெண்கள் எந்த துறையிலும் எந்த வயதிலும் சாதித்து காட்டலாம் என்பதற்கு உதாரணம் . இதற்கு முன்னாள் நியூஸ்லாந்தை சார்ந்த ஜசிந்தா ஆர்டனே மிக குறைந்த வயது பிரதமராக கருதப்பட்டார்.