Categories
தேசிய செய்திகள்

144…. வைரஸை பரப்புவோம்…. சர்ச்சையை கிளப்பிய இளைஞர் கைது….!!

கர்நாடகாவில் கொரோனா வைரஸை பரப்புவோம் என்று முகநூல் பக்கத்தில் பதிவிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொரோனா வைரஸை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து தடையை மீறி வீட்டை விட்டு வெளியே வருவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் இந்த சூழ்நிலையில்,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் முகமது முஜிப் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் கைகோர்ப்போம், பொது இடங்களுக்கு வெளியே செல்வோம், முகத்தை மூடாமல் தும்பி வைரஸை பரப்புவோம் என்று சர்ச்சைக்குரிய விதத்தில் பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்து அவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |