விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, ஷெரினா, அசல், விஜே மகேஸ்வரி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் அரண்மனையும் அருங்காட்சியகம் டாஸ்க் கொடுக்கப்பட்டதால் போட்டியாளர்கள் அனைவரும் ராஜா, மந்திரி, ராணி என விதவிதமான கெட்டப்பில் இருந்தனர். இந்த டாஸ்கின் போது படைத்தளபதியாக இருந்த அசீம் ராஜகுருவாக இருந்த விக்கிரமனை பார்த்து உங்கள் சாப்பாட்டில் எச்சில் துப்பி தந்தால் சாப்பிடுவீர்களா என்று கேட்டார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிக்பாஸ் வீடு அசீமுக்கு எதிராக மாறி உள்ளது. இதுகுறித்து கமல் பேசுவார் என்று போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது வீட்டிற்கு வந்த கமல் அசிமை வெளுத்து வாங்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது விக்ரமன் அசீம் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்கிறார். இதைக் கேட்ட கமல் உங்களுடைய குணம் உங்கள் தரம் என்ன என்பதை காட்டிவிட்டது என்கிறார். இதை கேட்ட அசீம் என்ன சொல்வது என்று தெரியாமல் ஆடிப்போய் நிற்கிறார். மேலும் இது தொடர்பான புரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.