தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் வர உள்ளதால் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றனர். தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது திமுக-அதிமுக என் என இரண்டு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் விடுதலையான சசிகலா எட்டாம் தேதி தமிழகம் திரும்பியுள்ளார். அவர்களின் வருகையால் அதிமுகவில் சில சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றது.
அவரை வரவேற்று போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது அதிமுக நிர்வாகம் கட்சியிலிருந்து நீக்கி வருகின்றது. தேர்தல் தேதி நெருங்கி உடன் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யும் பணி அரசியல் கட்சிகள் தொடங்கும். இந்த சூழலில் தேர்தலில் பணம் கொடுத்து வாங்கும் அரசியல் கட்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமநாதபுரத்தில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டது .
அதில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வாங்கும் மற்றும் விற்பவரின் கவனத்திற்கு எருமமாடு ரூபாய் 50,000, பசுமாடு ரூபாய் 40,000, ஆடு 10,000. நாய் 5000, பன்றி 5000, ஆனா மக்களின் ஓட்டு 500 முதல் 1000 வரை ஒரு பன்றியின் விலையை விட குறைவு. சிந்தித்து பணம் பெறாமல் வாக்களியுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.