Categories
தேசிய செய்திகள்

உன் முதல் சிரிப்பையும்…. உன் முதல் அழுகையும்… ரசித்த முதல் பெண் இவள்தான்…!!

உலக நாடுகள் முழுவதிலும் மே மாதம் 12 ஆம் தேதி அன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. சமூகத்திற்கு செவிலியர்கள் ஆற்றும் பங்களிப்பை நினைவுகூர இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஜனவரி மாதம் 1974ல்  நவீன தாதியியல் முறையை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்பவரது பிறந்த நாளான மே மாதம் 12 ஆம் தேதியை அவரை கவுரவிக்கும் விதமாகவும் நினைவுகூர முடிவு செய்யப்பட்டது. வருடம்தோறும் மே மாதம் 12 ஆம் தேதி செவிலியர் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலகிலுள்ள அனைத்து செவிலியர்களுக்கும் இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் பரவி வந்த கவிதை ஒன்று நம்மை ஈர்த்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது “உன் முதல் சிரிப்பையும், முதல் அழுகையையும் பிரம்மித்து ரசித்த முதல் ரசிகை அவளே செவிலியர்” அதாவது இந்த உலகில் உள்ள பல நாடுகளில் ஒவ்வொரு நாளும் பல குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தைகள் பிறந்த உடன் முதலில் அவரது தாய் அந்தக் குழந்தையைத் தொட்டுத் தூக்கும் முன்பு செவிலியரே முதலில் தூக்குகிறார்கள்.

தாயின் வயிற்றில் இருந்து வெளியே வரும் அந்தக் குழந்தையைத் தூக்கும் செவிலியர்கள் மிகுந்த பாசத்துடனும், அரவணைப்புடன் பாதுகாக்கின்றனர். இந்த உலகில் குழந்தை பிறக்கும்போது முதலில் சிரித்தாலும் சரி, அழுதாலும் சரி பிரமித்துப் பார்த்து ரசிக்கும் பெண்மணி செவிலியரே. வீட்டில் எப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தாலும் அதை தன்னுள் மறைத்து வைத்துக்கொண்டு நோயாளிகளிடம் மிகுந்த அக்கறையுடனும், கவனமுடனும் பாதுகாத்து, சிறிது கூட முகம் சுளிக்காமல் அவர்களை அரவணைத்து வருகின்றன. அப்படிப்பட்டவர்களின் நாளாக கருதப்படும் செவிலியர் தினமான இன்று அனைத்து செவிலியர்களுக்கும் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்

Categories

Tech |