நமது வீட்டு அரிசி பானையில் நாம் இப்படி செய்து வந்தால் எப்பொழுதும் சாப்பாட்டிற்கு பஞ்சம் வராது மற்றும் ஐஸ்வர்யம் பெருகும். அதைப்பற்றி நாம் இது தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கட்டாயத்தால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். எதற்காக சாப்பாட்டிற்கு பஞ்சம் என்ற நிலைமை எப்பொழுதும் நமக்கு வரக்கூடாது என்பதற்காக தான். அதேசமயம் வீட்டில் உள்ள உணவுப் பொருட்களுக்கு நாம் கட்டாயம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த பொருளையும் நாம் வீணாக்காமல் அதனை சரியான அளவிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
நிறைய இருக்கிறது என்பதற்காக அதிக அளவில் சாதத்தை வடித்து அதன் கீழே போடுவது கூடாது. இப்போதைய சூழ்நிலையில் மக்கள் பலர் ஒரு வேளை கூட உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். அதனால் நாம் உணவை வீண் செய்ய கூடாது. அதேசமயம் நம்முடைய வீட்டில் உணவுக்கு பஞ்சம் இருக்கக்கூடாது என்றால் நாம் அரிசியை எப்படி நம் வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். அன்றைய காலத்தில் உணவு சம்பந்தப்பட்ட அரிசி, கம்பு, கேழ்வரகு கோதுமை இப்படிப்பட்ட தானியங்களை எல்லாம் மண்ணால் செய்யப்பட்ட மண் குடுவை என்று சொல்லப்படும் பெரிய அளவில் மண்பானையில் தான் வைத்திருந்தனர்.
ஏனெனில் காசு பணம் குறைவாக இருந்தாலும் நம்முடைய வாழ்க்கை நிறைவாக இருக்கும். இன்றைய சூழ்நிலையில் நமது வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அந்த வரிசையில் உங்களுடைய வீட்டு சமையலறை பயன்படுத்திவரும் அரிசி கொட்டி வைக்கும் பாத்திரமாக இருந்தாலும் சரி, அரிசி மூட்டையாக வைத்திருந்தாலும் சரி அதன் உள்ளே எப்போதுமே ஒரு சிறிய மண் பானையை வைத்து பானையை அரிசி கொண்டு நிரப்பி வைத்திருக்க வேண்டும். அரிசியை எடுத்தாடும் அந்த மண் பானையில் அரிசி குறையவே கூடாது.
அவ்வாறு செய்தால் நம் வீட்டிற்கு லட்சுமி கலாசியத்தை கொடுக்கும். உங்கள் வீட்டில் அரிசி டப்பாவில், அரிசி மூட்டைகளில் அரிசி தீர்ந்து போனாலும் அந்த மண் பானையில் உள்ள அரிசி. தீர கூடாது அவ்வாறு செய்தால் நம் வீட்டில் பஞ்சம் என்பதே இருக்காது. அது மட்டும் இல்லாமல் தமது வீட்டில் கஷ்டங்கள் எல்லாம் மாறி நல்லதே நடக்கும்.