மகாராஷ்டிராவில் 100 சதவிகித தேர்ச்சிக்காக மாணவியை விஷம் கொடுத்து கொன்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிராவில் தனியார் பள்ளி ஒன்றில் செய்முறை தேர்வு நடைபெற்ற சமயத்தில் மாணவி ஒருவர் கெமிக்கல் நீரை குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதில் மர்மம் இருப்பதாக நினைத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த வகையில்,
ஆசிரியர் நிகிலேஷ் என்பவர் மாணவி சுனிதா என்பவரிடம் கெமிக்கல் நீரை கட்டாயப்படுத்தி குடிக்க சொன்னதாகவும் அதை குடித்த பின்பு சில நேரத்திலேயே அவர் துடிதுடித்து இறந்ததும் தெரிய வந்துள்ளது. மாணவி சரியாக படிக்க மாட்டார். என்பதால் அவரை பலமுறை பள்ளியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.
அவர் மறுக்கவே 100 சதவிகித தேர்ச்சி விகிதத்திற்காக யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கொலை செய்ய திட்டமிட்டு இதை செய்துள்ளார். இதை அறிந்த உடன் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்து அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.