Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாணவிக்கு ஏற்பட்ட சோகம்… தீவிர விசாரணையில் காவல் துறையினர்… போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைக்கு சென்ற மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் வசிக்கும் மாணவி அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி பெற்றோரிடம் கடைக்கு சென்று வருகிறேன் என்று கூறி விட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்த போது அப்பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற வாலிபர் மாணவியை கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து பிரகாஷிடமிருந்து  மாணவியை மீட்டு காவல் துறையினர் பெற்றோரிடத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்தியதற்காக அவரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |