Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தனியாக சிக்கிய கார் ஓட்டுநர்…. குழாயால் தாக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

கார் ஓட்டுனரை இரும்பு குழாயால் தாக்கி கொலை மிரட்டல் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டையில் வசந்த ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதனால் வசந்த ராஜ் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அங்கு வந்த ரமேஷ் அவரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை இரும்பு குழாயால் தாக்கி பின் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த வரதராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் ரமேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |