17 வயதுடைய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகாமையில் இருக்கும் கிராமத்தில் முனிவீரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 17 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் முனைவீரன் திருமண ஆசை காட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் அந்தப் புகாரின் அடிப்படையில் முனிவீரன் போக்சோ அனைத்துக் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.