9-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் வாலிபர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 9-ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவியை அதே பகுதியில் வசிக்கும் சத்தியமூர்த்தி என்பவர் உன்னை திருமணம் செய்து கொள்ளுவதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் சத்தியமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.