ராமநாதபுரம் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பி இளைஞர் ஒருவர் சிக்கிக்கொண்டார்..
ராமநாதபுரம் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கு, ஒரு எண்ணில் இருந்து வீடியோ ஒன்று வந்துள்ளது. அது என்ன வீடியோ என்று அதனைப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.. அதிர்ச்சி என்வென்றால் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தன்னை தானே நிர்வாணமாகப் படம்பிடித்து அனுப்பியிருந்தார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், வீடியோ அனுப்பிய அந்த இளைஞர் கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பதும், அவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்ததும் தெரியவந்தது. பிரேம்குமாரின் செல்போன் எண்ணை வைத்து அவரது வீட்டு முகவரியைக் கண்டுபிடித்த ராமநாதபுரம் போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவைக்கு வந்து அவரைக் கைதுசெய்து, கையோடு அழைத்துச் சென்றனர்.
அவர் மீது போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அந்த வீடியோவை வேறு ஒருவருக்கு அனுப்ப நினைத்து, தவறுதலாக ராமநாதபுரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வசமாக சிக்கிக் கொண்டது தெரியவந்துள்ளது.