சென்னை மதுரவாயலில் நண்பரை தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு சொந்த ஊருக்கு பேருந்தில் தப்பிச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர் .
மதுரவாயல் எரிக்கரையைச் சேர்ந்த நபர்களான முரளி ,சிம்சன் ஆகியோர் வாடகை வீட்டில் தங்கி வந்தனர் .அங்கு மது அருந்தும் போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது .இதில் ஆத்திரம் அடைந்த சிம்சன் முரளியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார் விசாரணையில் சிம்சன் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு பேருந்தில் சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது .
இதனையடுத்து பண்ருட்டி அருகே பேருந்தை நிறுத்தி சிம்சனை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர் .சிம்சன் பர்ஸில் இருந்த பணத்தை முரளி திருடியதால் தகராறு ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது .