கோவிலில் பூஜை பொருட்களை திருட முயன்ற வாலிபர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்செட்டியந்தல் கிராமப்பகுதியில் சடையப்பர் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலின் பூட்டை உடைத்து வாலிபர் ஒருவர் உள்ளே புகுந்து அங்கிருந்த பூஜைப் பொருட்களான தாம்பாளத் தட்டு மற்றும் பித்தளை குடம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து சிக்கிக்கொண்ட வாலிபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் திருட முயற்சி செய்த நபர் பைத்தந்துறை கிராமத்தில் வசிக்கும் விக்னேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.