மோட்டார் சைக்கிளில் 100 லிட்டர் சாராயம் கடத்திய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை காவல்துறை துணை ஆய்வாளர் தீபன் தலைமையிலான குழு அழகுபெருமாள்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சமயம் அவ்வழியாக மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்ததை கண்ட தீபன் தலைமையிலான குழு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கவிராஜன் என்பதும், அவர் விற்பனைக்காக சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து, அவர் கடத்தி வந்த 100 லிட்டர் சாராயத்தையும், அவரது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.