Categories
தேசிய செய்திகள்

இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம்… மாவட்ட ஆட்சியர் பணி இடமாற்றம்… முதல்வர் பூபேஷ் பாகல் அதிரடி..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில், வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்து முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தனது இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள மருந்து கடைக்கு மருந்து வாங்க சென்றவரை அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கிப்பிடித்தனர். வண்டியின் ஆவணங்களை போலீசார் இடம் காட்டியபோது அவரின் செல்போனை பிடுங்கி காலில் போட்டு உதைத்தது மட்டுமில்லாமல் அந்த இளைஞரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார் மாவட்ட ஆட்சியர். பின்னர் போலீசாரும் அந்த இளைஞரைத் தாக்கினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த இளைஞர் அதி வேகமாக சென்றதால் தடுத்து நிறுத்தி விசாரித்ததாகவும், அதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா மன்னிப்பு கேட்டார். சுராஜ்பூரின் மாவட்ட ஆட்சியரை சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பாகல் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ” சமூக ஊடகங்கள் மூலம், மாவட்ட ஆட்சியர் ஒரு இளைஞரிடம் தவறாக நடந்து கொண்ட விதம் எனது கவனத்திற்கு வந்தது. மேலும் இது மிகவும் வருத்தமாகவும், கண்டிக்கத்தக்கதாவும் இருந்தது இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் கலெக்டர் பூபேஷ் பாகல்வை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் பதிவிட்டிருந்தார்.

Categories

Tech |