Categories
மாநில செய்திகள்

“இளைஞர்களே வாருங்கள்” அரசியல் களம் காண்போம்…. அரசியலில் இறங்கும் சகாயம் ஐஏஎஸ்…!!

நேர்மையான அதிகாரியாக இருந்த சகாயம் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்ற பெயரை பெற்றவர் சகாயம். மதுரை மாவட்ட கலெக்டராக பணியாற்றியபோது கிரானைட் முறைகேடு, மணல் கொள்ளை உள்ளிட்டவற்றை வெளிக்கொண்டு வந்தவர். தன்னுடைய நேர்மையின் காரணமாக இவருக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டது. மேலும் அவருக்கு அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்த இவர் கடைசியாக தமிழ்நாடு அறிவியல் நகர துணை தலைவராக பணியாற்றி வந்தார்.  இதையடுத்து சமீபத்தில் அவர் விருப்ப ஓய்வு பெற்றார். சகாயத்திற்கு இளைஞர்களின் ஆதரவு அதிகம் என்பதால் பல ஆபத்தான சமயங்களில் கூட அவருக்கு இளைஞர்கள் பட்டாளம் துணை நின்றுள்ளது.

மேலும் சகாயம் போன்ற நேர்மையான மனிதர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அந்தவகையில் சென்னை ஆதம்பாக்கம் என்ற பகுதியில் மக்கள் பாதை சார்பில் “அரசியல் களம் காண்போம்” என்ற தலைப்பில் சகாயத்தை அரசியலுக்கு வர வைக்கும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டதால் மாநிலத்தில் உள்ள எள்றளமான இளைஞர்களும் அதில் கலந்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய சகாயம், “இளைஞர்களே வாருங்கள், ஊழல் இல்லாத புதிய தமிழகத்தில் நாம் உருவாக்குவோம். அரசியல் களம் காண்போம், நான் ஏற்றுக்கொள்கிறேன். அரசியல் களம் காண்பதை வரவேற்கிறேன். நான் உங்களோடு பயணிக்க ஆசைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார். சகாயத்தின் அரசியல் வருகை தொடர்பான அறிவிப்பு அவருடைய அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |