திருமணம் செய்து வைக்காத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் சேர்ந்தவர் கோமதி. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன் ரமேஷ் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இரண்டாவது மகன் அருண் வெளியூரில் பணிபுரிந்து வருகிறார்.
முதல் மகன் ரமேஷ் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தாயிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். அதற்கு கோமதி 25 வயது ஆனவுடன் பெண் பார்த்து மணமுடித்து வைப்பதாக கூறியுள்ளார்.
இதனால் வருத்தத்தில் இருந்து வந்த ரமேஷ் மாலையில் ரத்தினபுரி அருகே உள்ள சகல நேரி ஆற்றங்கரையில் உள்ள வேப்பமரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆத்தங்கரைக்கு சென்ற அப்பகுதியை சேர்ந்த மக்கள் ரமேஷின் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்து ரமேஷின் தாயாருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலின் பேரில் புளியங்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் பற்றி புளியங்குடி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்