உடல்நல குறைவால் அவதிப்பட்ட வாலிபன் விஷம் குடித்து தற்கொலை.
சென்னையை அடுத்த பொன்னேரி அருகில் உள்ளகோளூர் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சாந்தகுமார், சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனம் உடைந்து வாழ்க்கை மீது வெறுப்பு கொண்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் சாந்தகுமார். அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.