காதலியுடன் ஏற்பட்ட தகராறினால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவான்மியூர் குப்பம் பகுதியில் வசித்து வரும் சரவணன்(26) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், அடையாறு பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். சில தினங்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு இருந்து வந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் திருவான்மியூரில் இருக்கும் விடுதி ஒன்றில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போதும் தகராறு ஏற்பட மனமுடைந்த சரவணன் இரண்டாவது மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.