விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி மங்களபுரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் பாலகிருஷ்ணமூர்த்தியின் கார் கண்ணாடியை உடைத்தது சார்பாக போலீசார் சென்ற 21ஆம் தேதியன்று அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது ஆகாஷ் குடிபோதையில் இருந்ததால் அவரது அக்காவிடம் எழுதி வாங்கி மறுநாள் வரும்படி கூறி அவருடன் அனுப்பி வைத்துள்ளார்கள்.
இதையடுத்து வீட்டுக்கு வந்த ஆகாஷ் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதை மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆகாஷின் உறவினர்கள், விசாரணைக்கு போலீசார் அழைத்துச் சென்று அவரை தாக்கியதால்தான் இறந்து விட்டதாக குற்றம் சாட்டினார்கள். இந்நிலையில் இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கின்றார். இதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீஸ் முதல்கட்ட விசாரணை மேற்கொண்டார்கள். மேலும் இருபதாம் தேதி ஆகாஷ் மீது கொடுக்கப்பட்ட புகார் 21ம் தேதி விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட விவரம் கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.