Categories
மாநில செய்திகள்

என் அத்தை உனக்கு அண்ணி… தப்பா பழகாத… வெட்டி சாய்த்த வாலிபர்… கள்ளத்தொடர்பால் நடந்த கொடூரம்…!!!

தனது அண்ணியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை கொலை செய்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூரில் கூத்தாநல்லூர் மஜீதியா தெருவில் வசிப்பவர் அப்துல்கனி. அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் அஷ்ரப் அலி. உறவினர்களான இவர்கள் மலேசியாவில் வேலை செய்து வந்தனர். கொரோனோ காலத்தில் இவ்விருவரும் சொந்த ஊருக்குத் திரும்பினர். அப்துல் கனிக்கும் அவருடைய அண்ணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்துல் கனிக்கும் அஷ்ரப் அலிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்துல் கனியின் அண்ணி அஷ்ரப் அலிக்கு அத்தை முறை.

இதனால் தன் அத்தையுடன் கள்ளத்தொடர்பை விட்டுவிடுமாறு அப்துல்கனியிடம் அஷ்ரப் அலி எச்சரித்துள்ளார். இருவருக்கும் இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அப்துல்கனி தஞ்சையில் சுற்றி வருவதாக அஷ்ரப் அலிக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை ஒன்றரை மணியளவில் அப்துல் கனி தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்டில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த அஷ்ரப் அலி இவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த அஷ்ரப் அலி தான் வைத்திருந்த அரிவாளால் அப்துல் கனியை சரமாரியாக தாக்கியுள்ளார். கழுத்தில் பலத்த வெட்டு காயமடைந்த அப்துல்கனி கீழே விழுந்தார். இதை கண்ட அஷ்ரப் அலி அங்கிருந்து தப்பி ஓடினார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். உடனே அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காயமடைந்த அப்துல்கனி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அப்துல்கனி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த கொலை சம்பவம் குறித்து தஞ்சை போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Categories

Tech |