Categories
மாநில செய்திகள்

Youth Icon.. 2024 மீண்டும் BJP ஆட்சி.. உலகின் விஷ்வ குருModi..! அண்ணாமலை அதிரடி..!

பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  பிரதமர் மோடி எல்லா தேர்தலிலும் வெற்றி,  அது முதல் தேர்தலில் எம்எல்ஏ மட்டும் அல்ல முதலமைச்சர், முதல் தேர்தலில் எம்பி மட்டுமல்ல பிரைம் மினிஸ்டர். அதுவும் இரண்டு முறை தொடர்ந்து மெஜாரிட்டி வந்திருக்கக் கூடிய ஒரு மனிதர், எல்லா தேர்தலிலும் வித்தியாசமாக அணுகக் கூடிய ஒரு மனிதர்.

அமித்ஷாவைனுடைய தோழமை, மோடிஜினுடைய ஒரு டிராவல் எல்லாமே இந்த புத்தகத்தில் இருக்கிறது. அதனால் நிச்சயமாக நாம் படிக்க வேண்டிய புத்தகம், நம்முடைய வாழ்க்கை ஒரு மாற்றத்தை பார்ப்பதற்கான ஒரு புத்தகம், அது எதுவும் இல்லாமல் மோடிஜியை பற்றி நாம் சொல்கிறோம், மக்களிடம் போய் நாம் பேசுகிறோம். மோடியின் உடைய கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று இங்கு இருக்கக்கூடிய ஒருவர் நினைக்கும் போது நாம் பேசுவதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் அந்த புத்தகத்தில் இருக்கிறது.

21 நபர்கள் வல்லுனர்கள் எழுதிய புத்தகத்தில் எல்லா விஷயத்தையும் நாம் எடுத்து பேச முடியும். அதனால் இந்த விழாவிற்கு நம்முடைய நிர்மலா சீதாராமன் அவர்கள் வந்திருப்பது மிக சிறப்பு, ஏனென்றால் இன்றைக்கு காலையில் மோடிக்கு டெல்லியில் சொல்கிறார்….  உலகத்தில் நடக்கின்ற டிஜிட்டல் பேமெண்டில் 40 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது என்றால் நிர்மலா சீதாராமன் அவர்கள்  இங்கு இருக்கிறார்கள்.  கூட இருந்து மோடிஜியினுடைய விஷனை நிஜத்திற்கு கொண்டு வந்து டெலிவரி செய்த ஒரு அற்புதமான மனிதர் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். அந்த நாளிலேயே அவர்கள் வந்திருக்கிறார்கள் அவர்கள் பேசுவதை நான் கேட்க வேண்டும்.

இந்த அற்புதமான விழாவிற்கு வந்திருக்கக்கூடிய அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் கட்சியின் சார்பாக நன்றியை தெரிவித்து, கட்சி சாராமல் வந்திருக்கக்கூடியவர்களுக்கு கூட ஒரு பெரிய நன்றியை தெரிவித்து, இந்த மாபெரும் மனிதன் இந்த சகாப்தத்தை  உருவாக்கிக் கொண்டிருக்கின்ற நரேந்திர மோடி அவர்கள்,  2024ல் இன்னும் அதிக மெஜாரிட்டியில் வரவேண்டும்.  மறுபடியும் இந்த திட்டங்களை முன்னோக்கி எடுத்துட்டு கொண்டு போக சொல்ல வேண்டும்.  உலகத்தினுடைய விஸ்வகுருவாக மாற்றுவதற்கு நாம் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வலியுறுத்தி விடை பெற்றுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |