சாத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற கிராம கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டைப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. கிளைச் செயலாளர் ராமாசுப்பு மனுதாக்கல் செய்துள்ளார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளரான இவர் தன்னை போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்ததற்காக ஊர் கூட்டத்தை கூட்டி இருக்கிறார். கிராம மக்களின் ஒப்புதலைப் பெறாமல் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு ராமசுப்பு மனு கொடுத்ததற்கு கூட்டத்தில் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது.அப்போது ஏற்பட்ட மோதலில் சதீஷ் குமார் என்பவர் இறந்துவிட்டார்.
இது தொடர்பாக அதிமுக பிரமுகர்கள் ராமசுப்பு,ராம்குமார்,சுப்புராஜ் உள்ளீட்ட 5 பேரை ஏழாயிரம்பண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். உயிர்யிழந்த சதீஷ்குமார் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக சிவகாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார் கோட்டைப்பட்டி கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.