Categories
உலக செய்திகள்

ஒரேநேரத்தில் 2 பெண்களை மணந்த இளைஞர்… மணமகன் சொன்ன கரணம்…!!

ஒரே சமயத்தில் இரண்டு அழகான பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞன் அதற்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார்

இந்தோனேசியாவை சேர்ந்த Saepul 28 வயது இளைஞன் ஒருவர் Hariani மற்றும் Mustiawati என்ற இரண்டு அழகான இளம்பெண்களை சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். கொரோனா பரவலை பொருட்படுத்தாமல் இவரது திருமணத்தில் பலர் பங்கேற்றனர். ஆனால் சில விதிமுறைகளை காரணமாக ஒரு திருமணம் மட்டுமே மத விவகார அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும் என்ற சூழலில் Saepul-Hariani  திருமணம் மட்டும் பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மணப்பெண் Hariani கூறுகையில் “ஆறு மாத வேலை முடிந்து மலேசியாவிலிருந்து திரும்பிய போதுதான் அவரை சந்தித்தேன் பார்த்தவுடன் எனக்கு பிடித்துவிட்டது. இதற்கு முன்னதாக நான் யாரையும் காதலிக்கவில்லை” என கூறியுள்ளார். Mustiawati கூறியபோது “நான் இதற்கு முன்னர் ஒருவரை காதலித்தேன். ஆனால் எனது திருமண வாழ்க்கை Saepul-வுடன்  தான் என முடிவெடுத்து அவரை திருமணம் செய்து கொண்டேன் என கூறியுள்ளார்.

மணமகன் Saepul கூறியபோது “இருவரையும் திருமணம் செய்ய வேண்டுமென நான் நினைக்கவில்லை. ஆனால் அவர்களை காதலித்த பிறகு ஒருவரை மட்டும் திருமணம் செய்வது என்ன நினைத்து பார்க்க முடியவில்லை. அதற்கு பதிலாக இரண்டு பேரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழல் உருவானது. எனது பெற்றோரும் திருமணத்திற்கு ஆசிர்வாதம் அளித்தனர்” எனக் கூறியுள்ளார்

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |