Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

முன்விரோதமாக நடந்த சம்பவம்… வாலிபருக்கு நடந்த கொடூரம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின்னல் பகுதியில் பஸ்வான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவதம் பகுதியில் இருக்கும் மது கடைக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சிலர் பஸ்வானிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பஸ்வான் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது திடீரென எதிரில் வந்த மர்ம கும்பல் அவரை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி சென்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே பஸ்வான் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்வானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அதாவது மின்னல், ஆவதம் கிராம மக்களுக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதில் முதல் கட்டமாக ஒரே மாதத்தில் பழிக்குப் பழியாக 2 கிராமத்திலும் 4  கொலை நடந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |