இளைஞர்கள் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் தோகைமலை பகுதியில் கொரோனாவை தடுக்கும் விதமாக கழுகூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக் குடிநீர் வழங்கியுள்ளனர். இந்த குடிநீரை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி பருகுகின்றனர். மேலும் இதனை சிலர் தங்களது குடும்பத்திற்கு வாங்கி சென்று கொடுக்கின்றனர்