துக்க நிகழ்ச்சிக்கு சென்று பெண்ணா நதியில் குளித்த போது நீரில் மூழ்கி ஏழு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி பகுதியை சேர்ந்த வெங்கட சிவாவின் தந்தை சந்திரசேகர் உயிரிழந்தார். இவர் துக்கநிகழ்ச்சி சந்திரசேகரின் சொந்த ஊரான கடப்பா மாவட்டம் சீதமண்டலம் புதுப்பேட்டை கிராமத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வெங்கட சிவா திருப்பதியை சேர்ந்த அவர் நண்பர் உள்ளிட்ட 11 பேர் கடபாவிற்கு சென்றுள்ளனர். பின்னர் சித்த வட்டம் பகுதியில் பெண்ணா நதியில் தொடர் மழையின் காரணமாக 20 ஆண்டுகளில் இல்லாமல் தற்போது தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
இதனை பார்த்து இளைஞர்கள் தண்ணீரில் செல்பி எடுத்து, பின்னர் குளிப்பதற்கு நதியில் இறங்கி யுள்ளனர். இந்நிலையில் நதியில் குளித்துக் கொண்டிருந்த 8 பேரையும் திடீரென தண்ணீரின் வேகம் இழுத்துச் சென்றது. அவர்களில் சோமசேகர், யஷ்வந்த், தருண், ஜெகதீஷ், ராஜேஷ், சதீஷ் மற்றும் ஷான் ஆகிய 7 இளைஞர்கள் நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர. இதன் பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நீச்சல் வீரர்கள் தண்ணீரில் மூழ்கி காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை மூன்று பேரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களை தேடி வருகின்றனர்.