இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வ.உ.சி கலை கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சார்பாக பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் பேசியுள்ளதாவது, தமிழக அரசு இளைஞர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தூத்துக்குடியில் நிறைய இளைஞர்கள் இருக்கின்றார்கள். இந்த நிலையில் மாணவர்களுக்கு படிப்பு மட்டுமே உதவாது. தங்களின் வேலைவாய்ப்பு திறன்களை வளர்த்துக் கொள்ளவும் வேண்டும். ஆகையால் அரசின் திட்டங்களை பயன்படுத்தி இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் என பேசியிருக்கின்றார்.