கொடூரமாக கொலை செய்த இளைஞர் சொகுசாக வாழும் தகவல் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
ஆஸ்திரேலியாவில் மோர்கன், ஜேம்ஸ் மற்றும் கிறிஸ்டோபர் ஆகிய 3 பேரும் ஒன்றாக வசித்து வந்தனர். இதனையடுத்து ஒரு நாள் குடிபோதையில் மூன்று பேர் இடையே வாக்குவாதம் ஏற்பட மோர்கனை மற்ற இருவரும் கத்தியால் குத்தி உள்ளனர். அதோடு விடாமல் 133 முறை அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததோடு அவரது தலையை வைத்து பந்து விளையாடி பப்பெட்டாகவும் உபயோகப்படுத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவை அதிரவைத்த இந்த கொடூர செயலுக்காக கிறிஸ்டோபர் சிறைச்சாலையிலேயே மரணம் அடைய வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 15 வருடங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்ட அவர் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தாலும் பிரிட்டன் குடிமகன் என்பதால் கிறிஸ்டோபர் பிரிட்டனுக்கு நாடுகடத்தப்பட்டார். இந்நிலையில் கொடூர கொலை செய்த கிறிஸ்டோபர் தற்போது மக்களின் வரி பணத்தில் சொகுசு ஹோட்டலில் வாழ்ந்து வருவது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.