மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர்களுக்கு தர்ம ஆதி கொடுத்த உறவினர்கள்.
சென்னையை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் சென்னையில் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வரும் நிலையில் விடுமுறை எடுத்து தனது ஊரான நெல்லைக்கு ஆம்னி பஸ் ஒன்றில் வந்துள்ளார். அவருடன் பணிபுரியும் மூன்று இளைஞர்களும் அதே பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அதில் ஒருவருக்கு தஞ்சாவூர் எனவும் மற்றும் இருவருக்கு நாங்குநேரி அருகில் எனவும் தகவல் உள்ளது.
3 வாலிபர்களில் ஒருவர் அப்பெண்ணை காதலிப்பதாக வலை வீசியுள்ளார். காதலர் தினத்தன்று தனது காதலை உறுதிப்படுத்தவே அந்தப் பெண் பயணிக்கும் அதே பேருந்தில் பயணம் செய்ததாக தெரிய வருகிறது. அவ்வப்போது மூன்று வாலிபர்களும் அந்த பெண்ணுடன் பேச்சுக் கொடுத்து வந்துள்ளனர். அதில் ஒரு இளைஞன் அந்த பெண்ணிற்கு காதல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணிற்கு அது எரிச்சல் கொள்ள செய்ய தனது கைப்பேசியை எடுத்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து ஆத்திரம் கொண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் வன்னாரபேட்டை வந்து மகள் வரும் பேருந்துக்காக காத்திருந்தனர்.
இன்று காலையில் சுமார் 7 மணி அளவில் பேருந்து வண்ணாரப்பேட்டை வரவும் காத்திருந்த கும்பல் பேருந்தை வழிமறித்து உள்ளே சென்று மகளை பாதுகாப்பாக கீழே இறக்கி தொல்லை கொடுத்த மூன்று இளைஞர்களையும் கீழே இழுத்துப் போட்டு தர்ம அடி கொடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வண்ணாரப்பேட்டையில் பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் விரைந்து வந்து விசாரித்துள்ளனர். இளம்பெண் விஷயம் என்பதால் நாங்கள் வழக்கு கொடுக்க விரும்பவில்லை எனக்கூறி உறவினர்கள் பேசித் தீர்த்துக் கொள்வதாக கூறி 3 வாலிபர்களையும் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.