உத்தர பிரேதேசத்தில் மூதாட்டி ஒருவரை பாதுகாவலர் டார்ச்சர் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் மிகவும் கொடூரமான மனித நேயத்திற்கு விரோதமான செயல் ஒன்று நடைபெற்று உள்ளது. அது குறித்த வீடியோவும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், உத்தரபிரதேசத்தில் வயதான மூதாட்டி ஒருவரை மருத்துவமனை பாதுகாவலர் எட்டி உதைத்து வெளியே போகும்படி தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட ஏழை மூதாட்டி பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு,
தங்கும் இடம் இல்லாததால் மருத்துவமனையில் ஓரமாக அமர்ந்துள்ளார். அவரை பார்த்த பாதுகாவலர் ஆரம்பத்திலேயே கடுமையாக பேசியதுடன், அவரை பலமுறை எட்டி உதைத்து விரட்டுகிறார். அந்த மூதாட்டி வலி தாங்க முடியாமல் கதறி அழும் காட்சி நெஞ்சை பதற வைக்கிறது. இந்நிலையில் அந்த பாதுகாவலரை கடுமையாக தண்டிக்க வேண்டும். மூதாட்டியை முதியோர் இல்லத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்து பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். வீடியோ கீழே….