Youtubeல் பிரீமியம் அல்லாத பயனர்கள் இனி ஐந்து விளம்பரங்களை பார்த்த பின்பே வீடியோவை பார்க்கும் முறையை அந்நிறுவனம் விரைவில் அமல்படுத்த உள்ளது. தற்போது இதை சோதனை செய்து வருவதாகவும் youtube தெரிவித்துள்ளது.ஏற்கனவே இரண்டு விளம்பரங்கள் வரும் நிலையில் ஐந்து விளம்பரங்களும் சில வினாடிகள் மட்டுமே ஓடும் பம்பர் விளம்பரங்கள் என்கிறது youtube. ஒன்று நீங்கள் விளம்பரங்களை பார்த்தே ஆக வேண்டும் அல்லது கட்டணம் செலுத்தி பிரீமியம் சந்தாதாரராக வேண்டும்.
ஒருபுறம் விளம்பரங்கள் இப்படி திணிக்கப்பட்டு வருகிறது என்றாலும், மறுபுறம் விளம்பரத்தை தடுக்கும் எக்ஸ்டென்சன்கள், மென்பொருள்களை பயனர்கள் நிறுவி வருகின்றனர். யூடியூப்பில் விளம்பரங்களைத் தடுப்பதற்கு என பிரத்யேகமாக Ad block for Youtube கூகுள் குரோம், மைக்ரோசாப்ட் எட்ஜ் நீட்டிப்புகள் மேம்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.