உலகம் முழுவதும் கூகுளுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் இணைய தளம் என்றால் அது youtube தான். இதில் மக்கள் தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதன் மூலமாக தினந்தோறும் வருவாய் ஈட்டி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் youtube சேனல் தொடங்கலாம் என்ற நிலை வந்து விட்டது.
இந்நிலையில் பயனர்களின் தேவையை கருதி யூடியூப் புதிய அப்டேட்டுகளை அடிக்கடி வெளியிட்டு வரும் நிலையில் அண்மையில் youtube ஷார்ட்ஸ் வீடியோ ஆப்ஷன் கொண்டுவரப்பட்டது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது youtube இல் கருத்து பதிவிடுவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது விதிகளை மீறி தவறான கருத்துக்களை பதிவிட்டால் அந்த நபருக்கு youtube எச்சரிக்கை நோட்டிபிகேஷன் ஒன்றை அனுப்பவும். அதையும் மீறி தவறான கருத்துக்கள் தொடர்ந்து பதிவிடப்பட்டால் 24 மணி நேரத்திற்கு கருத்து பதிவிடும் சேவை அந்த நபருக்கு தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.