கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் க்கு போட்டியாக அதிகாரப்பூர்வ உரிமம் பெற்ற பாடல் வீடியோவுக்கான வசதியை பேஸ்புக் தற்போது தேர்வு செய்துள்ளது.
அமெரிக்காவில் அடுத்த மாதம் முதல் புதிய பாடல் வீடியோவுக்கான வசதியை பேஸ்புக் செயல்பட வைப்பதாக பிரபல இசைக்கலைஞர்களின் பக்கங்களுக்கு பேஸ்புக் தனது மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இதில் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு முன் அவரவர் பேஸ் புக் பக்கங்களில் ஒரு புதிய செட்டிங்கை இயக்க வேண்டும். இதன் மூலம் தானாகவே அவர்களின் பாடல் வீடியோக்கள் புதிய சேவைக்கு மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளது. இதை செய்வதன் மூலம் அவர்களின் பாடல் வீடியோவை சேர்ப்பதற்கு உண்டான அனுமதியை அந்த கலைஞர்கள் வழங்குவதாக எடுத்துக்கொள்ளப்படும். இந்த அமைப்பை செய்யவில்லை என்றாலும் கூட அந்த இசைக் கலைஞன் பெயரில் அவரது அதிகாரபூர்வ இசைக்கான பக்கங்களை பேஸ்புக் தானாகவே உருவாக்கும். தங்கள் வீடியோவையும் மற்ற இணைப்புகளை இசைக்கலைஞர்கள் பதிவேற்ற வேண்டிய அவசியம் ஏற்படாது.
சேர்க்கப்பட்ட பாடல் வீடியோக்களில் விவரங்களை பிறகு கூட இங்கு மாற்றிக் கொள்ளலாம். இந்தப் பேஸ்புக்கின் வாட்ச் பக்கம் மூலமாகவும் புதிய இசைக்கான பக்கத்தை பயனாளர்கள் பார்க்கலாம். இதுபற்றி பேஸ்புக் தரப்பிலிருந்து இதுவரை ஊடகங்களுக்கு எந்த ஒரு அறிக்கையும் வரவில்லை. யூடியூபில் சுமார் 200 கோடி பயனாளர்களுக்கு மேல் உள்ளனர். 2019 ஆம் வருடம் மட்டும் இசைத்துறைக்கு யூடியூபில் இருந்து 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் வந்துள்ளது. விளம்பரம் இல்லாத சேவையில் கூகிள் 2 கோடி சந்தாதாரர்களை பெற்றுள்ளனர்.யூடியூப் கட்டண தொலைக்காட்சி சேவையில் 20 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இன்னொரு பக்கம் பேஸ்புக்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சர்வதேச அளவில் 260 கோடிக்கு மேல் உள்ளது.