சமூக வலைதளமான யூ டியூப் பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ பேசிய கொரோனா பற்றிய தவறான தகவல் குறித்த வீடியோவை நீக்கியுள்ளது.
சமூக வலைதள நிறுவனங்கள் கொரோனா குறித்த தவறான தகவல்கள் அதிகாரபூர்வமற்ற அறிவியலுக்கு புறம்பானவையாக இருக்கும் பட்சத்தில் அவை குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆதாரமற்ற தவறான தகவல்கள் அடையாளம் காணப்பட்டு அவை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ ஹைட்ரோ குளோரோகுயின் மருந்தானது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வல்லமை பெற்றது என்று பேசிய வீடியோவை யூ டியூப் நிறுவனம் தனது தளத்திலிருந்து நீக்கியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கொரோனா தொற்றை முக கவசங்களால் கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் வீடியோவில் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.