104 YouTube சேனல்கள் உள்பட பல்வேறு இணையதளங்களை மத்திய அரசு தடைசெய்துள்ளது. அதாவது, 104 YouTube சேனல்கள், 5 டுவிட்டர் கணக்குகள் மற்றும் 6 இணையதளங்கள் நாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்து சமூகத்தில் குழப்பத்தையும் அச்சத்தையும் பரப்பியதற்காக ஐடி சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்தாக ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது கேள்விகளுக்கு பதிலளித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த தகவலை தெரிவித்தார். அப்போது நாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்து சமூகத்தில் குழப்பத்தையும் அச்சத்தையும் பரப்பும் விவகாரத்தில் இந்திய அரசு ஐடி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.