Categories
உலக செய்திகள்

‘அடித்தது அதிர்ஷ்டம்’…. லாட்டரி வென்ற பிரெஞ்சுக்காரார்…. வெளிவந்துள்ள தகவல்கள்….!!

யூரோ மில்லியன் டிரா விளையாட்டில் பிரெஞ்சுக்காரர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

யூரோ மில்லியன் டிரா விளையாட்டை நேற்று இரவு பிரான்ஸ், ஸ்பெயின், பிரித்தானியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், அயர்லாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளில் விளையாடி உள்ளனர். இந்த நாடுகளிடம் தான் யூரோ மில்லியன் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. அதிலும் விளையாட்டில் வெற்றி பெற வேண்டுமெனில் 7 எண்கள் சரியாக அமைந்திருக்க வேண்டும். இதன்படி நேற்று யூரோ மில்லியன் டிரா விளையாட்டில் வெற்றி பெற்ற எண்களாக 49, 21, 26, 34, 31, போன்றவை இருந்துள்ளன.

மேலும் லக்கி நட்சத்திரங்களாக 05 மற்றும் 02 இடம்பெற்றுள்ளது. இதனை அடுத்து விளையாட்டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 184 மில்லியன் யூரோ பரிசுத்தொகை கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு வரை பிரித்தானியா முழுவதும் ஐந்து யூரோ மில்லியன்ஸ் ஜாக்பாட் வெற்றியாளர்கள் உள்ளனர். இதில் அதிகபட்சமாக ஏப்ரல் மாதம் 122 மில்லியனும் ஜூன் மாதத்தில் 111 மில்லியனும் பரிசுத்தொகையாக கிடைத்துள்ளது. ஆனால் இவற்றை விட தற்பொழுது கிடைத்துள்ள பரிசுத்தொகை எல்லா காலத்திலும் வெற்றி பெற்ற லாட்டரி ஆக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

Categories

Tech |