இதையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சிகள் நடந்துவந்தன, தற்போது திரைக்கதையும் தயாராகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் எழிலிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த ஆனந்த் இயக்குகிறார். கதாநாயகனாக விஷால் நடிக்கிறார். விஷாலுடன் இணைந்து நடிப்பவர்களை தேர்வுசெய்து வருகின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.