வைஷ்ணவி ஜீ தமிழின் புதிய சீரியலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”நாம் இருவர் நமக்கு இருவர்”. இந்த சீரியலில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வைஷ்ணவி என்கின்ற ஐஸ்வர்யா. இதனிடையே, இவரது கதாபாத்திரம் இந்த சீரியலில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை.
இந்நிலையில், இவர் ஜீ தமிழின் புதிய சீரியலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ”பேரன்பு” என பெயரிடப்பட்டிருக்கும் இந்த சீரியலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
https://www.instagram.com/p/CWe005Mvysp/?utm_source=ig_embed&ig_rid=9754fbd8-618d-4b3a-bbdd-ae383f7f9003