ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள பிரிட்டன் நாட்டின் பிரதமராகக்கூடிய போட்டியில் இருக்கக்கூடிய இரண்டு பேரை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைத்திருக்கிறார்.
ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது மேற்கொண்டிருக்கும் போரில் போரிஸ் ஜான்சன் நன்றாக ஆதரவு தெரிவித்து வந்தார். அதேபோன்று அந்நாட்டின் பிரதமராக போகும் நபரும் இருப்பாரா? என்பதை தெரிந்து கொள்வதற்காக அதிபர் ஜெலன்ஸ்கி ஆவலுடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரிட்டன் பிரதமராகும் போட்டியில் இருக்கும் இரண்டு பேரை தங்கள் நாட்டிற்கு அழைத்திருக்கிறார்.
அதன் பிறகு, ரஷ்யா பற்றி அவர்களுடைய திட்டம் என்ன? என்பதை உலக நாடுகளுக்கு அறிவிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கடுமையான சூழலில் உக்ரைன் நாட்டு மக்களுக்காக ஆதரவு தெரிவித்தார்.
மேலும், உலக நாடுகளிடம் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதேபோல் அந்நாட்டின் புதிய பிரதமரும் தங்கள் நாட்டுடன் நட்பாக இருக்க வேண்டும் என்றும் உதவுவதற்கு முன்வர வேண்டும் என்றும் உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினரான Oleksii Goncharenko கூறியிருக்கிறார்.