Categories
உலக செய்திகள்

எங்களை மொத்தமாக அழிக்க நினைக்கிறார்கள்…. உக்ரைன் அதிபர் வேதனை…!!!

உக்ரைன் நாட்டின் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி, ரஷ்யா தங்களை மொத்தமாக அழிக்க நினைப்பதாக கூறியிருக்கிறார்.

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர், எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் பல நகரங்களும் நாசமாகியுள்ளன. ரஷ்யா மற்றும் கிரீமியாவை சேர்க்கக்கூடிய முக்கிய பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த பாலம் கடும் சேதமடைந்து, மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ரஷ்யா, உக்ரைன் மீது தீவிரமாக தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது, எங்கள் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் நடந்திருக்கும் வெடிகுண்டு தாக்குதலால் பலர் பலியாகியுள்ளனர். பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எங்களை மொத்தமாக ரஷ்யா அழிக்க முயன்று வருகிறது. பூமியிலிருந்து மொத்தமாக அகற்றி விட வேண்டும் என்று அவர்கள் நினைப்பதாக கூறியிருக்கிறார்.

Categories

Tech |